Vijay Sethupathi has finished dubbing mumbaikar movie

Advertisment

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான படம் 'மாநகரம்'. ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா கெசண்ட்ரா, சார்லி, முனீஸ்காந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய லோகேஷ் கனகராஜ், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார்.

‘மாநகரம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘மும்பைகர்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்தை இயக்கிவருகிறார்.விக்ராந்த் மாசே, தன்யா மாணிக்டலா, ஹ்ரிது ஹரூன், சஞ்சய் மிஸ்ரா ஆகியோர் படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் நடிகர் விஜய் சேதுபதி முனீஸ்காந்த் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, டப்பிங் பணியில் தீவிரம் காட்டிவருகிறது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="82951de1-4192-4560-b925-41b5efe025dc" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_5.jpg" />

Advertisment

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி 'மும்பைகர்'படத்தின் டப்பிங் பணியை நிறைவுசெய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசனுடன் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.